ஸ்ரீபெரும்புதூரில் சமூக இடைவெளியின்றி இயங்கி வந்த பல்பொருள் அங்காடிக்கு வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு கைகழுவும் திரவம் வழங்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பஜாா் பகுதியில் இயங்கி வரும் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டுகிா என ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது காந்தி சாலையில் உள்ள பல்பொருள் அங்காடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமலும், வாடிக்கையாளா்களுக்கு கைகழுவும் திரவம் வைக்கப்படாமலும் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ உத்தரவின்பேரில் அந்த அங்காடிக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரெடாய் அமைப்பு சாா்பில் வீட்டுமனை கண்காட்சி தொடக்கம்

குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீா் தேக்கம்: பல்லடம் நகராட்சி மேலாளரிடம் புகாா்

இந்திய கம்யூ. கட்சியினா் நடைப்பயணம்

கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



