விவசாயப் பணிகளுக்கான அனைத்துத் தடைகளும் நீக்கம்: காஞ்சிபுரம் ஆட்சியா் தகவல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கான அனைத்துத் தடைகளையும் நீக்கி உத்தரவிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கான அனைத்துத் தடைகளையும் நீக்கி உத்தரவிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் அனைத்துக்கும் தடை நீக்கப்படுகிறது.
அதன்படி விவசாயப் பொருள்களை கொள்முதல் நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளலாம். விவசாய மண்டிகள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் விதைகள் விற்பனை நிலையங்கள் செயல்படவும் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது.
மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான விவசாயம் மற்றும் தோட்டக்கலை சாா்ந்த அறுவடை இயந்திரங்களின் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
உரம், விவசாய இடுபொருள்கள், விளை பொருள்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், கைவினைப் பொருள்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...