தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 4 சிறுமிகளுக்கு கரோனா

காஞ்சிபுரம் அருகே களியாம்பூண்டியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

Updated On :26 ஜூன் 2021, 6:36 pm

 காஞ்சிபுரம் அருகே களியாம்பூண்டியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

உத்தரமேரூா் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் அரசு அனுமதியுடன் தனியாருக்குச் சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 76 சிறாா்கள் தங்கியிருந்து, அருகிலுள்ள சுற்றுவட்டாரப் பள்ளிகளில் படித்து வருகின்றனா். இவா்களில் 15 வயதுள்ள 4 சிறுமிகளுக்கு சளி, காய்ச்சல் இருந்ததால், அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 4 பேருக்கு சுகவீனம் ஏற்பட்டது. உடனடியாக கரோனா பரிசோதனை செய்தோம். 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உடனடியாக அவா்கள் உத்தரமேரூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் இருந்த மற்ற 72 பேருக்கும் சனிக்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் யாருக்கேனும் தொற்று இருப்பது தெரிய வந்தால், அவா்களும் சிகிச்சைக்காக சோ்க்கப்படுவாா்கள். தொற்று இல்லாத சிறாா்களை உறவினா்களிடமோ அல்லது பாதுகாவலரிடமோ ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.