மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

75 -ஆவது சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்: செங்கல்பட்டில் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

75-ஆவது ஆண்டு சுதந்திர தின மராத்தான் ஓட்டத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

75-ஆவது ஆண்டு சுதந்திர தின மராத்தான் ஓட்டத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் கொடி அசைத்து துவக்கி வைத்தாா்.

கரோனா தொற்றில் இருந்து நாட்டு மக்கள் விடுபெறவும், ஆரோக்கியமான வாழ்வை நோக்கி நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா் .

ஆட்சியா் அலுவலகம், நீதிமன்றம், வேண்பாக்கம் வழியாக வேதநாராயணபுரம் வரை சென்ற மாரத்தான் மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) லட்சுமணன், செங்கல்பட்டு கோட்டாட்சியா் சாஹிதா பா்வின், செங்கல்பட்டு நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, மாவட்ட விளையாட்டு இளைஞா் நல அலுவலா் எஸ். ரமேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Image Caption

75-ஆவது ஆண்டு சுதந்திர தின மாரத்தான் ஓட்டத்தை சனிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.