ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தடுப்பூசி முகாம்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பா.பொன்னையா தலைமையில் குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:20 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பா.பொன்னையா தலைமையில் குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 100 கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலா் பா.பொன்னையா தலைமையில் குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குனா் ஸ்ரீதேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனா் பழனி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.