காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்திப் பூங்கா: அமைச்சர் ஆர்.காந்தி

இந்தியாவிலேயே முதல் முறையாக காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்திப் பூங்கா இம்மாதம் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்திப் பூங்கா: அமைச்சர் ஆர்.காந்தி
காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்திப் பூங்கா: அமைச்சர் ஆர்.காந்தி

இந்தியாவிலேயே முதல் முறையாக காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்திப் பூங்கா இம்மாதம் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் 75 ஏக்கர் பரப்பளவில் ரூ.102.83 கோடி மதிப்பில் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு உற்பத்திப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்பூங்காவில் நடந்து வரும் பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறித்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, இம்மாதம் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளன்று பட்டு உற்பத்திப் பூங்காவை சட்டப் பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இப்பூங்காவில் கைத்தறி நெசவு, பட்டு மற்றும் பருத்தி சாயமிடுதல், எம்பிராய்டரி மற்றும் கார்மெண்டிங் ஆகிய இனங்களில் மொத்தம் 82 தொழிற் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

மேலும் இப்பூங்காவின் மூலம் கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், சாயமிடுபவர்கள் என மொத்தம் 18 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தான் கைத்தறி பட்டு உற்பத்திப் பூங்கா தொடங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது அவரால் பட்டுப்பூங்கா காஞ்சிபுரத்தில் திறக்கப்படும் என அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கியிருந்தார். அதன்பிறகு வந்த ஆட்சி இத்திட்டத்தை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டது. திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் பூங்கா பணிகளை ஆய்வு செய்து, வரும் 15 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 25 சதவிகித பணிகள் முடிந்த நிலையில் திறப்பு விழாவை நடத்துகிறோம். அடுத்த ஆண்டு 100 சதவிகிதம் பட்டுப்பூங்கா பணிகள் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் மூடப்போவதாக அறிவித்துள்ளன. அந்த இரு நிறுவனங்களையும் வேறு ஒரு நிறுவனம் வாங்க இருக்கிறது. ஆனால் இரு நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களை திமுக அரசு எப்போதும் கைவிடாமல் பாதுகாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர்களின் ஆய்வின் போது எம்.பி.க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர்கள் கணேசன், தெய்வானை ஆகியோரும் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com