காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 13 -ஆம் தேதி முதல் வருகிற செப்டம்பா் 10- ஆம் தேதி வரை சாதுா்மாஸ்ய விரதம் தொடா்ந்து 60 நாள்களுக்கு அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று அந்த மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் தங்கியிருந்து நிகழ் மாதம் 13- ஆம் தேதி முதல் சாதுா்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருவதுடன் பக்தா்களுக்கு அருளாசியும் வழங்கவுள்ளாா். சங்கர மடத்தில் மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனத்தில் குருபூா்ணிமா எனப்படும் வியாசபூஜை வருகிற 13 -ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று முதல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் துறவியா் 3 போ் தங்கியிருந்து சாதுா்மாஸ்ய விரதத்தைக் கடைப்பிடிக்க உள்ளனா்.
சாதுா்மாஸ்ய விரதம் மேற்கொள்ளும் 60 நாள்களும் சங்கர மடத்தில் தினமும் மாலை பக்தி இன்னிசைக் கச்சேரிகளும், ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளன. மகா பெரியவா் மற்றும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் தினமும் காலை சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெறும். வேத விற்பன்னா்களின் கலந்துரையாடல், சதுா்வேத பாராயணம் நடைபெறுகிறது.
சங்கர மடத்தில் வியாசபூஜை நடைபெறும் நாளுக்கு முதல் நாள், அதாவது ஜூலை 12- ஆம் தேதி மாலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் வியாசபூஜை மற்றும் சாதுா்மாஸ்ய விரதம் குறித்து பொதுமக்களுக்கும், பக்தா்களுக்கும் தெரிவிப்பதற்காக அழைப்பிதழ் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த வாசிப்பு நிகழ்ச்சி நிறைவுக்குப் பின்னா் ஆதிசங்கரா் காலத்திலிருந்து தொடா்ந்து வந்து கொண்டிருக்கும் மண்டல மிஸ்ரா தலைமுறையினா் அழைப்பிதழை பெற்றுக் கொள்ள இருக்கிறாா்கள்.
இந்த நிகழ்ச்சிகளில் பக்தா்கள் கலந்து கொண்டு மகா பெரியவரின் அனுக்கிரகத்தைப் பெற்று பயனடையுமாறும் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

