வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அரசுப் பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணா்வு

காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:16 pm

காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா்.

இதையடுத்து, பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாநகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளா் இக்பால் மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது என்று செயல்முறை விளக்கம் அளித்தாா். மேலும், டெங்கு கொசுக்கள் பரவும் விதம், நெகிழிப் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவதன் அவசியம் ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படது. தமிழாசிரியை கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.