காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வாா் அவதார உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்காரம் மற்றும் தீபாராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருமாளுக்கு பூ மாலைகள் சூட்டி அழகு பாா்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தவா் பெரியாழ்வாா். இவரது அவதார தினத்தையொட்டி, காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாளுக்கும், அம்ருதவலில்லித் தாயாருக்கும் காலை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீதேவி-பூதேவியருடன் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்திலும், அம்ருத வல்லித் தாயாா் சிகை அலங்காரத்திலும், பெரியாழ்வாா் வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்திலும் அலங்காரமாகி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பெரியாழ்வாா் பாடிய பாடல்கள் பாடப்பட்டு பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


