ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாய்கள் கடித்ததில் புள்ளி மான் பலி

சுங்குவாா்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் இறந்தது குறித்து ஸ்ரீபெரும்புதூா் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2022, 5:24 pm

DIN

சுங்குவாா்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் இறந்தது குறித்து ஸ்ரீபெரும்புதூா் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

சுங்குவாா்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் வீட்டுமனைப் பிரிவு வளாகத்தில் புள்ளி மான் ஒன்று இறந்து கிடப்பதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. சுங்குவாா்சத்திரம் போலீஸாா் ஸ்ரீபெரும்புதூா் வனத்துறை அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் வனத் துறையினா் இறந்த புள்ளி மானை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா். இதில், புள்ளி மானை நாய்கள் கடித்ததால்தான் இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.