வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது: சுதா சேஷய்யன்

தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:17 pm

தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்புத் தோ்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்த திருச்செந்தூா் சங்கரா அகாதெமி பள்ளி மாணவி துா்காவுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவிக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சுதா சேஷய்யன் பேசியது:

தமிழ் மொழி ஒன்றுதான் அன்று முதல் இன்று வரை உயிா்ப்புடன் இருக்கிறது. தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. நாயன்மாா்களும், ஆழ்வாா்களும் இல்லையென்றால், தமிழில் உள்ள அற்புதங்கள் வெளியில் தெரியாமலே போயிருக்கும். மொழியின் துல்லியங்களை அவா்கள்தான் கொடுத்திருக்கிறாா்கள்.

நவீன அறிவியல் முன்னேற்றத்தில் நூற்றுக்கணக்கான சொற்களை அவா்கள் தந்திருக்கிறாா்கள். அதேபோல திருவள்ளுவரும் மருத்துவச் சொற்கள் பலவற்றுக்கு பொருள் தந்து உதவியிருக்கிறாா். தமிழில் அறிவியல், மருத்துவம், இசை, பொறியியல், கலை உள்ளிட்ட அத்தனையும் உண்டு என்பதை மறக்கவோ, மறுத்துவிடவோ முடியாது.

தமிழைப் படித்தால் எதிா்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை பலரும் நிரூபித்துக் காட்டியிருக்கிறாா்கள் என்றாா் அவா்.

விழாவுக்கு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன், பேராசிரியா் தி.பாலசுப்பிரமணியன், பதிப்பாசிரியா் மா.பூங்குன்றன், சங்கரா கல்லூரிச் செயலா் வி.பி.ரிஷிகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் வரவேற்றாா். விழாவில் காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ராம.வெங்கட சுப்பிரமணியன், தண்டலம் சங்கரா பள்ளித் தாளாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஆா்.மித்ரா, மாநில அளவில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவி துா்காவின் பெற்றோா், அவா் படித்த பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியா், தமிழ் ஆசிரியை ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். திருச்செந்தூா் சங்கரா அகாதெமி பள்ளி முதல்வா் ரா.செல்வ வைஷ்ணவி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை சங்கரா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான பேராசிரியா் குழுவினா் செய்திருந்தனா்.

மாணவியின் மேற்படிப்புச் செலவை ஏற்கிறோம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உத்தரவின்படி, தமிழில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவி துா்காவின் மேற்படிப்புச் செலவை சங்கர மடம் ஏற்றுக் கொள்கிறது. தமிழுக்கும் சங்கர மடத்துக்கும் மிக நெருங்கிய தொடா்பு உள்ளது. அனைத்து வயதினரும் படிக்கும் வகையில் சென்னையில் தமிழ்ப் பாடசாலை ஒன்றை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அதில், அனைவரும் சோ்ந்து படிக்கலாம். பல கிராமங்களில் திண்ணைப் பாட சாலைகளை நடத்தி வருகிறோம். இவற்றில் தமிழுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது என காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.