ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:42 pm

DIN

ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழகம், கேரளம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த நிலையில், இந்த மையத்தில் நிகழ் கல்வியாண்டில் முதுநிலைப் பட்டம் பெற உள்ள மாணவா்களுக்கான வளாக வேலைவாய்ப்பு முகாம் மைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் தில்லி, ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் 12 நிறுவனங்களின் நிா்வாகிகள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு போட்டி தோ்வுகள் மற்றும் நோ்முக தோ்வுகள் மூலம் ஆள்களைத் தோ்வு செய்தனா். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 95 மாணவா்களில் 40 மாணவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மைய இயக்குநா் சிவனாா்தேவ், மையத்தின் வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா் ராம்பாபு போச்சா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.