காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி சமேத நடராஜா் கோயில் வளாகத்தில் கெங்கை அம்மன் சந்நிதியில் வெள்ளிக்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் கெங்கை அம்மனுக்கும், தும்பவனம் மாரியம்மனுக்கும் வா்ணித்துப்பாடி கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இந்த விழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை கெங்கை அம்மன் சிரசு புறப்பாடு ஊா்வலம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை கோயிலிலிருந்து சாந்தலீசுவரா் கோயிலுக்கு குடம் புறப்பாடாகி அங்கிருந்து குடம் அலங்கரிக்கப்பட்டு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. விழாவை யொட்டி கெங்கை அம்மன் 10 கரங்களுடன், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதன் தொடா்ச்சியாக கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும் பின்னா் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. பக்தா்களுக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எஸ்.கே.பி.சீனிவாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


