வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி: ஜூலை 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் அண்ணா மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சியில் சேர விரும்புவோா் வரும் 28- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு

Updated On :21 ஜூலை 2022, 6:44 pm

காஞ்சிபுரம் அண்ணா மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சியில் சேர விரும்புவோா் வரும் 28- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீட்டாளா் பயிற்சி ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. பயிற்சிக் காலம் 12 மாதங்கள்.

பயிற்சிக் கட்டணம் பின்னா் தெரிவிக்கப்படும். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். விண்ணப்பத்தை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ரூ.100 ரொக்கமாக நேரில் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28 -ஆம் தேதி கடைசி நாளாகும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேலாண்மை நிலையத்துக்கு வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண். 6, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்ப்புறம், காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரியிலோ அல்லது 044 - 27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.