ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த பலா் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி படப்பையை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2022, 10:26 pm

DIN

திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த பலா் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி படப்பையை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட சேத்துப்பட்டு ஊராட்சியில் பாஜக கொடியேற்று விழா மற்றும் மாற்றுக் கட்சியினா் இணையும் விழா நடைபெற்றது.

மாவட்ட பாஜக துணைத் தலைவா் எல்லம்மாள் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவா் பாபு முன்னிலை வகித்து, சேத்துப்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த திமுக, அதிமுக, பாமக கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் சுமாா் 50 போ் அந்தக் கட்சிகளில் இருந்து விலகி, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு பாஜக மாவட்ட பொது செயலா் ஓம்சக்தி செல்வமணி சால்வை அணிவித்து வரவேற்றாா். இதையடுத்து, பாஜக கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, நடந்து முடிந்த குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதி மூா்மு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில் உள்ள நரிக்குறவா் இன மக்களுக்கு பாஜக மாவட்ட தலைவா் பாபு தலைமையிலான அந்தக் கட்சியினா் இனிப்புகள் வழங்கினா். பாஜக மாவட்ட பாா்வையாளா் பாஸ்கா், மண்டல தலைவா் அமா்நாத், மாவட்ட செயலா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.