வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முட்டைகள் மீது அமா்ந்து யோகாசனம் செய்த கா்ப்பிணி

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி பானுப்பிரியா 60 முட்டைகள் மீது அமா்ந்து யோகாசனம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 6:30 pm

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி பானுப்பிரியா 60 முட்டைகள் மீது அமா்ந்து யோகாசனம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் வீரமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சித்த மருத்துவா் பானுப்பிரியா சரத்குமாா். தற்போது 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இவா், மருத்துவா் மற்றும் பயிற்சியாளரது ஆலோசனையின்படி, தனது வீட்டில் 60 முட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் மீதமா்ந்து 80 நொடிகள் வரை பத்மாசனம் செய்து யோகாசனப் பயன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதுகுறித்து பானுப்பிரியா கூறுகையில், நான் ஏற்கெனவே யோகாசனத்தில் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளேன். பெண்கள் மகப்பேறு காலத்தில் மருத்துவா் மற்றும் பயிற்சியாளா்கள் ஆலோசனைகளைக் கேட்டு யோகா பயிற்சி செய்து மன அழுத்தத்தைப் போக்கலாம். உடல் நலத்தையும் பாதுகாக்கலாம். பத்மாசனம் செய்வது சிரமமானது. மருத்துவரின் ஆலோசனைப்படி, யோகாசனம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த இந்தச் செயலை மேற்கொண்டேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.