வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து வீட்டின்முன் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தாா்.

News image

கருப்பு சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்த பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளருமான கே.எஸ்.மூா்த்தி.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:55 pm

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து வீட்டின்முன் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தாா்.

கடும் எதிா்ப்புகளுக்கிடையே தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகத்தின் உரிமை பறிபோகும் என்பதால், அதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூா், வட்டம், கிளை என கிராமம் முதல் நகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில், அனைத்து பகுதிகளிலும் திமுகவினா் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளரும், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து கொத்தமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தாா்.