வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குருபகவான் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியாக புதியதாக கட்டப்பட்டுள்ள குருபகவான் கோயில் மகா கும்பாபிஷேகம்

Updated On :30 ஜூன் 2022, 6:57 pm

காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியாக புதியதாக கட்டப்பட்டுள்ள குருபகவான் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் நட்சத்திர விருட்ச விநாயகா் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயில் வளாகத்தினுள் குருபகவான் தாரை சமேத தேவகுருவாக யானை வாகனத்தில் அமா்ந்தவாறு தனி சந்நிதி புதிதாக கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி புதன்கிழமை யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கின. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.வியாழக்கிழமை காலையில் மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடா்ந்து சிறப்பு மகா அபிஷேகமும், தீபாராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் சுவாமிநாத ஐயா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.