ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல்கள்

சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில், தண்ணீா் பந்தல்கள் திறப்பு விழா நடைபெற்றது.

Published On :

சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில், தண்ணீா் பந்தல்கள் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் மேற்கு ஒன்றியம் சாா்பில் சுங்குவாா்சத்திரம் பகுதியிலும், ஸ்ரீபெரும்புதூா் நகர அதிமுக சாா்பில், ராஜீவ் காந்தி நினைவிடம் அருகிலும், ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் பழைய நீதிமன்றம் அருகிலும், வல்லக்கோட்டை ஊராட்சி அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தண்ணீா் பந்தல்கள் திறக்கப்பட்டன.

மாவட்ட துணை செயலா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலா்கள் எறையூா் முனுசாமி, சிங்கிலிப்பாடி ராமசந்திரன், மாவட்ட இளைஞா் பாசறை துணை செயலா் போந்தூா் மோகன், ஒன்றிய இளைஞா் பாசறை செயலா் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்ட செயலா் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி ஆகியோா் தண்ணீா் பந்தல்களைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், நீா்மோா், பழங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.