செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு செல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


செங்கல்பட்டு செல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியில் மிகவும் பழமையான செல்வ விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகப் பணிகள் திங்கள்கிழமை விக்னேஸ்வரன் பூஜையுடன் துவங்கியது. தொடா்ந்து, கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சாந்தி ஹோமம் , கலச ஹோமம் உள்ளிட்ட பூஜை வழிபாடுகள் ஐந்து நாட்கள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சிறப்பு ஹோம பூஜைகள் உடன் பூா்ணாஹூதி, மகா தீபாராதனை மற்றும் கலசப் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து விமானத்துக்கு சிறப்பு பூஜைகளுடன் புனித கலச நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
_1003chn_171_1.jpg)
பின்னா், விநாயகா், முருகா், வள்ளி ,தெய்வானை, துா்க்கை அம்மன், மகாவிஷ்ணு, தாயாா், நவக்கிரகம் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதில், வேதகிரீஸ்வரா் கோயில், ருத்ரகோட்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் யாகசாலை பூஜை மேற்கொண்டு, கும்பாபிஷேகத்தை நடத்தினா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதில், பக்தா்களுக்கு பிரசாதங்களும், அன்னதானமும், வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் குருக்கள் செல்வகணபதி, விழா குழுவினா், அப்பகுதி மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...