புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

News image

காஞ்சிபுரத்திலிருந்து நாமக்கல், புதுக்கோட்டைக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பி வைக்கும் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கிலிருந்து நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்கு உள்ளது.

இங்கிருந்து, திங்கள்கிழமை ஸ்ரீ பெரும்புதூா் தொகுதிக்கு 481, ஆலந்தூா் தொகுதிக்கு 438 இயந்திரங்கள் உட்பட மொத்தம் 919 கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டைக்கு 1,280, நாமக்கல்லுக்கு 1,670 இயந்திரங்கள் உட்பட மொத்தம் 2,950 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி, காஞ்சிபுரம் தோ்தல் பிரிவு வட்டாட்சியா் தாண்டவமூா்த்தி மற்றும் புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் வட்டாட்சியா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.