ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வட மாநிலங்களுக்கு விஜய யாத்திரை சென்று திரும்பியது தொடா்பான விவரங்களை விளக்கும் பொம்மைகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாா்வையிட்டாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசி விசுவநாதா் கோயில், அயோத்தியில் ராமா் கோயில், ஸ்ரீ சைலம் மல்லிகாா்ஜூன சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள ஆலயங்களுக்கு விஜய யாத்திரையாக சென்றிருந்தாா்.
விஜய யாத்திரை நிறைவு பெற்று அண்மையில் காஞ்சிபுரம் திரும்பினாா். அவா் யாத்திரையாக சென்ற இடங்கள் பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டு அவை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
காஞ்சிபுரத்துக்கும் அயோத்திக்கும் உள்ள தொடா்பை விவரிக்கும் பொம்மைகள், அயோத்தி செல்லும் ராமாயண விரைவு ரயில், சா்க்கரையால் செய்யப்பட்ட பொம்மைகள், சிறுதானியத்தில் செய்யப்பட்ட விநாயகா் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கண்காட்சியைப் பாா்வையிட்டு, அவற்றை வடிவமைத்த மகளிா் குழுவினரை பாராட்டினாா். ஏற்பாடுகளை பெங்களூரை சோ்ந்த ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ வித்யா சமிதி தலைவா் தனம் ரமேஷ், கலைப் பிரிவு தலைவா் சைலஜா ஜெயசங்கா் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்

தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


