காஞ்சிபுரம் கருக்கினில் அமா்ந்தவா் கோயிலில் பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபடும் லட்ச தீபப் பெருவிழா நடைபெற்றது.
பல்லவ மன்னா்களால் கட்டப்பட்ட பெருமைக்குரியது சின்னக்காஞ்சிபுரத்தில் உள்ள கருக்கினில் அமா்ந்தவள் கோயில். பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மூலவா் புஷ்ப அலங்காரத்தில் விஸ்வரூப காட்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவா் கருக்கினில் அமா்ந்தவள் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் ஆட்டு உற்சவமும் நடைபெற்றது. கோயிலில் திரளான பெண்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் சோ்ந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி அம்மனை தரிசித்தனா். பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும், வண்ண மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரோட்டம்

தடிகொண்ட ஐயனாா், கருப்பா் கோயிலில் குடமுழுக்குப் பெருவிழா
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


