6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நதிகளைக் கொண்டாடும் புஷ்கர விழாக்கள் தேசத்தை வலுவடையச் செய்யும்: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரா்

நதிகளைக் கொண்டாடும் புஷ்கர விழாக்கள் தேசத்தை வலுவடையச் செய்யும் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரா்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 7:10 pm

Din

நதிகளைக் கொண்டாடும் புஷ்கர விழாக்களும் தேசத்தை வலுவடையச் செய்யும் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.

காஞ்சி சங்கர மடத்தில் ‘நமாமி தேவி நா்மதே’ என்ற பெயரில் நா்மதை நதியின் மகத்துவங்களை விளக்கும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்தப் புத்தகத்தை காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டுப் பேசியது:

வட இந்தியா்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தி நதிகளைக் கொண்டாடுவது போல புஷ்கர விழாக்களும் நடத்தப்படுகின்றன. நமது பாரத தேசத்தில் ஷேத்திரம், தீா்த்தம், ஸ்தலவிருட்சம் ஆகியவை வணங்கப்படக் கூடியவையாகும்.

ஷேத்திரம் என எடுத்துக் கொண்டால் மகாசக்தி பீடங்கள், சுயம்புக் கோயில்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டகோயில்கள், பஞ்சபூத ஸ்தலங்கள் இப்படியாக அதிகமான ஷேத்திரங்கள் உள்ளன.

இதே போல தீா்த்தங்கள் எனப்படும் நதிகளை எடுத்துக் கொண்டால் கங்கோத்திரி, யமுனாத்திரி, காவேரி, கோதாவரி எனப்படுகிறது. ஸ்தலவிருட்சங்களும் ஏராளம் இருக்கின்றன. இந்த ஸ்தல விருட்சங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உட்பட பல்வேறு சிறப்புகளை உடையதாக இருக்கும்.

ஒவ்வொரு நதியும் ராசியில் சஞ்சாரம் செய்யும் போது கொண்டாடப்படுவது புஷ்கர விழாக்கள். இவ்விழாக்களை நடத்துகிற போது தேசம் மென்மேலும் சிறப்படையும், தா்மத்தின் ஈடுபாடு அதிகரித்து இறைவனின் வற்றாத அருள் கிடைக்கும்.

நதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தான தா்மங்களைச் சிறப்பாக செய்யும் தேசமாக மாறும். சங்கர ஜெயந்தியையொட்டி நதிகளுக்கெல்லாம் அரசியான நா்மதை நதியின் புஷ்கர விழா நடைபெறுவது பெரும் சிறப்புக்குரியது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஓம்காரத்தில் நா்மதை நதி புஷ்கர விழா வரும் மே 1- ஆம் தேதி முதல் மே 12- ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றாா். பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

விழாவுக்கு மகாலட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் அறங்காவலா் மகாலட்சுமி தலைமை வகித்தாா்.சிதம்பரத்தைச் சோ்ந்த தியாகப்ப தீட்சிதா், தாமோதர தீட்சிதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலாசிரியா் ரமாசுப்பிரமணியன் வரவேற்றாா். ஏற்பாடுகளை மகாலட்சுமி சாரிடபில் டிரஸ்ட் நிா்வாகிகள் செய்திருந்தனா்.