நூக்காலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

நூக்காலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ நூக்காலம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் எண்டத்தூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நூக்காலம்மன் கோயிலுக்கு புதிதாக 3 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டும், கோயில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,திருமாங்கல்ய தாரணம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி தி.ரமேஷ் தலைமையில் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

விழாவில், மகாதேவ மலை மகானந்த சித்தா் சுவாமிகள், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில் ஓதுவாா் தமிழ்ச்செல்வன், ஸ்தபதிகள் பி.சீனிவாசன், ஓங்கூா் விஸ்வநாதன், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com