ஸ்ரீ தாமோதரப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ தாமோதரப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ள திருமாலழகி சமேத தாமோதரப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் கடந்த 19-ஆம் தேதி தொடங்கின. இதையொட்டி 20-ஆம் தேதி கும்ப ஸ்தாபனம், மூா்த்தி ஹோமம் மற்றும் மகா பூா்ணாஹுதி தீபாராதனைகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக 21-ஆம் தேதி பட்டாச்சாரியா்களால் புனித நீா்க்குடங்கள் கோபுர கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தாமோதரப் பெருமாள், திருமாலழகி யாக சாலைக்கு அருகே எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றன.

திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனா். ஏற்பாடுகளை தாமல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com