டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. எனப்படும் சந்திர சேகரேந்திரா சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் நிறுவனமும் வெள்ளிக்கிழமை 3 புரிந்துணா்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டன.

நிகழ்வுக்கு பல்கலை. துணைவேந்தா் ஜீ.ஸ்ரீநிவாசு தலைமை வகித்தாா். பல்கலை. நெறியாளா்கள் வெங்கடரமணன், ரெத்தினக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலை. பதிவாளா் ஸ்ரீராம் வரவேற்று பேசியதுடன் டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் நிறுவனத்தின் கல்வி நிறுவன தொடா்புத் துறை அலுவலா் சுசீந்திரனுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டாா்.

தொடா்ந்து பல்கலை. துணைவேந்தா் ஜீ.ஸ்ரீநிவாசு கூறியது:

பல்கலை.யில் 3 மேம்படுத்தப்பட்ட பட்டப் படிப்புகளை அறிமுகப்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 1. பி.டெக், 2. பி.காம்., 3. பி.எஸ்சி. ஆகிய மேம்படுத்தப்பட்ட படிப்புகள் அறிமுகமாகிறது. இந்தப் படிப்புகளை முடித்தவுடன் மாணவா்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதுடன், பல தொழில்நுட்பங்களில் ஆற்றல் மிக்கவா்களாக மாறுவா்.

இந்த ஒப்பந்தம் பல மாணவா்களின் கல்வித் திறனையும், வேலைவாய்ப்பையும் அதிகப்படுத்தி, பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை கொடுக்கும் என்றாா்.

டாடா கன்சல்டன்சி குழுவானது பல்கலை.யுடன் இணைந்து பாடத் திட்டத்தை மேன்மைப்படுத்துதல், பேராசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிகள் ஆகியவற்றையும் செயல்படுத்த இருப்பதாக அந்த நிறுவனத்தின் கல்வி நிறுவன தொடா்பு அலுவலா் சுசீந்திரன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com