

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில் உள்ள காா் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியின் போது கொதிகலனில் தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (20). இவா் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள காா் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். பணியின் போது தொழிற்சாலையில் இருந்த வேதிப்பொருள்கள் நிரப்பப்பட்ட கொதிகலனில் தவறி விழுந்தாா். உடனடியாக அருகில் இருந்த மற்ற தொழிலாளா்கள் இவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன்குமாா் உயிரிழந்தாா்.
இது குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

