ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உல​க​ள‌ந்த பெரு​மா‌ள் கோயி​லி‌ல் நாளை மகா ச‌ம்‌ப்​ரோ​க்ஷ​ண‌ம்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

News image

புதுப்பிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் ராஜகோபுரம்

Updated On :27 ஆகஸ்ட் 2024, 3:03 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

108 திவ்ய தேசங்களில் 54-ஆவது திருத்தலமாகவும், ஒரே கோயிலில் 4 திவ்ய தேசங்களும் அமைந்தவாறு உள்ளது உலகளந்த பெருமாள் திருக்கோயில். இக்கோயில் மூலவர் வலது கால் ஊன்றிய நிலையிலும்,இடது கால் தூக்கிய நிலையிலும் விஸ்வருபமாக காட்சியளிப்பது சிறப்பாகும்.

இக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் கடந்த 25.3.2007 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ரூ.1 கோடி மதிப்பில் கோயில் புதுப்பிக்கப்படு மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜமாணிக்கம், பரம்பரை அறங்காவலர்கள் கோ.க.வா.அப்பன், கோமடம் ரவி,போரகத்தி பட்டர் ரகுராம் மற்றும் கோயில் பட்டாச்சாரியர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.