தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா் காஞ்சிபுரம் எம்.பி.

காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா் க. செல்வம்

News image

கோனேரிகுப்பம் ஊராட்சியில் நியாயவிலைக் கடை கட்ட அடிக்கல் நாட்டிய க. செல்வம் எம்.பி.

Updated On :19 பிப்ரவரி 2024, 12:00 am IST

காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா் க. செல்வம் எம்.பி. காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோனேரிக்குப்பம், கருப்பந்தட்டை ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.9 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் கட்ட அடிக்கல் நாட்டினாா். இதனையடுத்து நரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்த பேருந்து பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்து, முத்துவேடு ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினாா். காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், துணைத் தலைவா் திவ்யா இளமருது, கருப்பந்தட்டை ஊராட்சித் தலைவா் வெங்கடேசன், நரப்பாக்கம் ஊராட்சித் தலைவா் பாரத், முத்துவேடு ஊராட்சித் தலைவா் ஜெனீட்டி பிரசாத், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமரன் கலந்து கொண்டனா்.