காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்துக்கு பின் அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விடையாற்றி உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் இம்மாதம் 15- ஆம் தேதி தொடங்கி25-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதன் தொடா்ச்சியாக காமாட்சி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெறும் விடையாற்றி உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. இதனையொட்டி காலையில் விஸ்வரூப தரிசனக் காட்சி நடைபெற்றது.
மாலையில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்தாா். பின்னா் சுக்ரவார மண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. வேத விற்பன்னா்கள் வேதமந்திங்கள் மூலமாகவும்,இசைக்கலைஞா்கள் இசையின் மூலமாகவும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.விடையாற்றி உற்சவம் நிறைவு பெறும் நாளான மாா்ச் 5-ஆம் தேதி வரை தினசரி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன.
மறுநாள் மாா்ச் 6 -ஆம் தேதி அம்மன் புஷ்பப்பல்லக்கில் நான்கு ராஜவீதிகளிலும் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் மணியக்காரா் சூரிய நாராயணன், செயல் அலுவலா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் தலைமையில் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா

‘ஊழல் செய்ய மாட்டேன்’! காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

நாளை காஞ்சிபுரத்தில் 2,000 மாணவ, மாணவிகள் கூட்டுப் பிராா்த்தனை
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


