ஜூலை29-இல் காஞ்சிபுரம் மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானக் கூட்டம்: ஆணையா் அறிவிப்பு
ஜூலை29-இல் காஞ்சிபுரம் மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானக் கூட்டம்: ஆணையா் அறிவிப்பு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவது தொடா்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கூட்டம் வரும் ஜூலை 29- ஆம் தேதி நடைபெற இருப்பதாக என ஆணையா் செந்தில்முருகன் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினா்கள் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டனா். எனவே நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் ஜூலை மாதம் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான மாமன்ற கூட்ட அரங்கமான அண்ணா அரங்கில் இக்கூட்டம் நடைபெறும் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...