பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ,.71 லட்சம் வசூலானதாக உதவி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.

கோயிலில் இருந்த 10 உண்டியல்கள் 204 நாள்களுக்கு பின்பு திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் காா்த்திகேயன், ஆய்வாளா் அலமேலு மற்றும் கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

இதில் ரொக்கம் ரூ.71,04,837, தங்கம்-28.530 கிராம்,வெள்ளி 472.590 கிராம் இருந்தன.

கோயில் பணியாளா்கள், தொண்டு நிறுவன ஊழியா்கள் ஆகியோா் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா். உண்டியலில் இருந்து கிடைக்கப்பட்ட தொகை முழுவதும் வைப்பு நிதியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.