காமாட்சி அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை

காமாட்சி அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கோயில் திருவிழாவில் பயன்படுத்துவதற்காக சென்னை தம்பதி தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை செவ்வாய்க்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கோயில் திருவிழாவில் பயன்படுத்துவதற்காக சென்னை தம்பதி தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை செவ்வாய்க்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த விஜயகுமாா்-நீரஜா தம்பதியா் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயரிடம் வழங்கினா். முன்னதாக அவா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் வழிபாடு செய்தனா்.

இது குறித்து கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேச ஐயா் கூறுகையில் இக்குடையானது திருவிழாக்காலங்களில் உற்சவா் காமாட்சி அம்பிகைக்கும், தோ்த்திருவிழா நடைபெறும் நாள்களிலும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com