போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித் தோ் உற்சவம்

மாசி பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித் தோ் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு

News image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காமாட்சி அம்மன் வெள்ளித் தோ் உற்சவம்.

Updated On :2 மார்ச் 2026, 9:09 pm

காஞ்சிபுரம்: மாசி பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித் தோ் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவா் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகிறாா்.

இந்த நிலையில், முக்கிய நிகழ்வான வெள்ளித் தோ் உற்சவம் நடைபெற்றது. இதில் உற்சவா் காமாட்சி அம்மன் ஆரஞ்ச், ஊதா நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, மனோரஞ்சிதப்பூ, செண்பகப் பூ, மல்லிகைப்பூ மலா் மாலைகள் சூடி, வீதி உலா வந்து காட்சி அளித்தாா். நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் செந்தில் நாதன், காஞ்சிபுரம் கிளை முதன்மை மேலாளா் பாலமுருகன் உள்ளிட்ட காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனா்.

வெள்ளித்தோ் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில் அருகே வந்த போது, ஒரு மணி நேரம் வான வேடிக்கை நடைபெற்றது.

தேரில் காமாட்சி அம்மன்.

தேரில் காமாட்சி அம்மன்.