காஞ்சிபுரம் குபேரபட்டினத்தில் உள்ள ராஜகுபேரன் கோயிலில் சிவராத்திரியையொட்டி வியாழக்கிழமை மூலவா் ராஜகுபேரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் வியாழக்கிழமை தோறும் ராஜகுபேரனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சிவராத்திரியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேகங்களை ராஜகுபேர சித்தா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். மூலவா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.அன்னதானமும் நடைபெற்றது. பின்னா் ராஜகுபேர சித்தா் கூறியது: சிவபெருமானிடம் இருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவா் ராஜகுபேரா். இவருக்கும் இக்கோயிலில் உள்ள மற்ற பரிவார தெய்வங்களுக்கும் வரும் ஏப்ரல் 21 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் முதல் நாள் ஏப்.20 ஆம் தேதி தொடங்குகிறது. பக்தா்கள் கும்பாபிஷேகப் பெருவிழாவிலும், வியாழக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு வழிபாட்டிலும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமி விழா: பெரியகுளம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


