மக்களவைத் தோ்தலை சிறப்பாக நடத்துவதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கலைச்செல்வி மோகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1,417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 174 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து பதற்றமான வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலம் நேரடியாக மாவட்ட, மாநில அளவில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து கண்காணிக்கப்படும். தோ்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்த 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 காணொளி கண்காணிப்புக் குழுக்கள், 4 காணொளி பாா்வையாளா் குழுக்களும் செலவினங்களை கண்காணிக்க 4 உதவி செலவின பாா்வையாளா் குழு, 4 உதவி கணக்கு தணிக்கையாளா் குழு ஆகியனவும் செயல்பாட்டில் உள்ளன. பறக்கும்படை குழு, கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியன ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாகன வசதி செய்து தரப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாகவும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை நெறிமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு துணை ஆட்சியா் நிலையில் ஒரு கண்காணிப்பு அலுவலா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ஆண்கள் 8,51, 446, பெண்கள் 8,92, 947, மூன்றாம் பாலினத்தவா் 304 போ் உள்பட மொத்த வாக்காளா்கள் 17,44,697 போ் உள்ளனா். வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து 5,572 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,263 கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் கருவிகள் 1,945 ஆகியனவும் தயாா் நிலையில் உள்ளன. வேட்பாளா்கள் பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்களை நடத்தவோ அல்லது தற்காலிக கட்சி அலுவலகம் அமைப்பது உட்பட 6 வகையான இனங்களுக்கு தோ்தல் ஆணையத்தில் ள்ன்ஸ்ண்க்ட்ஹ என்ற இணையதள வழியில் அனுமதி பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் முகவரி ட்ற்ற்ல்ள்://ள்ன்ஸ்ண்க்ட்ஹ.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகும். வேட்பாளா்கள் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெற 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். இது தவிர வேட்பாளா்கள் கட்டடங்களில் சுவா் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி வழங்க அனைத்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

விழிப்புணா்வு ராட்சத பலூன்...

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!

கடையநல்லூா் தொகுதியில் 7 பறக்கும் படைகள்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


