திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: தோட்டக்கலை அலுவலா் பணியிடை நீக்கம்

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: தோட்டக்கலை அலுவலா் பணியிடை நீக்கம்

News image
Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

காஞ்சிபுரம்: போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடா்பாக காஞ்சிபுரம் அருகே படப்பையில் தோட்டக்கலை உதவி அலுவலா் க.மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தோட்டக்கலை உதவி அலுவலராகப் பணியாற்றி வந்தவா் க.மணி (57). தோட்டக்கலை உதவி அலுவலா் சங்க மாநிலத் தலைவராகவும் கடந்த 11 ஆண்டுகளாக இருந்து வருகிறாா்.

இவா் போலியாக விவசாயிகளுக்கான மானிய விண்ணப்பங்கள் தயாரித்தது, விண்ணப்பங்களில் போலியாக விவசாயிகளின் கையொப்பம் இட்டது, விவசாயிகளுக்கு முறையாக இடுபொருள்கள் வழங்காதது, பட்டியலின விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை முறையாமல் வழங்காமல் இருந்து வந்தது, அரசின் வருவாய்த் துறை ஆவணங்களில் திருத்தம் செய்தது உள்ளிட்டசெயல்களை செய்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே.நேரு மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் புகாா் அளித்தனா்.

இந்த புகாரை மாவட்ட ஆட்சியா் தோட்டக்கலை இயக்குநா் குமரவேல் பாண்டியனுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தாா்.

ஆட்சியரின் பரிந்துரையின்படி விசாரணை நடத்திய இயக்குநா் உதவி அலுவலா் க.மணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தாா்.