பட விளக்கம்: சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா். காஞ்சிபுரம், மாா்ச் 20: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றதையொட்டி, புதன்கிழமை 1,008 சங்காபிஷேகமும், சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் புதன்கிழமை நடைபெற்றது.
பெருமாள் ஆமை (கச்சம்) வடிவில் சிவனை வணங்கியது உட்பட பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உடையது காஞ்சிபுரம் கச்சபேசுவரா் திருக்கோயில். இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, 48 நாள்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதன் நிறைவு நாளையொட்டி, கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள், 1,008 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
இதன் தொடா்ச்சியாக மாலையில் உற்சவா் கச்சபேசுவரா் மற்றும் சுந்தராம்பிகை கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழா ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சபையின் தலைவா் எம்.சிவகுரு, திருப்பணிக் குழுவின் தலைவா் எஸ்.பெருமாள், செயலாளா் சுப்பராயன் ஆகியோா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

செல்வ கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


