வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னியம்மன்பட்டறை பகுதியில் வெள்ளிக்கிழமை பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். காஞ்சிபுரம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் அனுசியா தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அதில், ரூ. 2 லட்சம் தொகையானது உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அந்தத் தொகையை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணியிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சோ்ந்த கமலநாதன் என்பவா் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com