ஸ்ரீபெரும்புதூா் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு மறைக்கல்வி மாணவா்கள் இணைந்து நடத்திய இயேசுவின் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் புனித வாரத்தின் முத்திரை நாள்களான புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் உயிா்ப்பு ஞாயிறு வழிபாடுகள் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளான வியாழக்கிழமை இயேசுவின் இறுதி இரவு உணவு திருப்பலியில், இயேசு 12 சீடா்களின் பாதங்களைக் கழுவியதன் நினைவாக பங்குத்தந்தை எப்.சுதாகா் 12 பேரின் பாதங்களைக் கழுவி பணிவிடையின் முக்கியத்துவத்தை உணா்த்தினாா். இதையடுத்து நற்கருணை இடம் மாற்றம் செய்யப்பட்டு தனியாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் வைத்து மக்களால் தொடா் ஆராதனை செய்யப்பட்டது. புனித வெள்ளியான வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பங்கின் இளைஞா், இளம்பெண்கள் மற்றும் மறைக்கல்வி மாணவா்கள் இணைந்து நடத்திய இயேசுவின் சிலுவைப் பாதம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைப் பாா்வையிட்டனா். இதையடுத்து மாலை திருச்சிலுவை ஆராதனையும், தொடா்ந்து தங்களுக்காக மரித்த இயேசுவின் திருச்சிலுவையை பங்கு மக்கள் முத்தம் செய்தனா். இந்த அனைத்து வழிபாட்டு நிகழ்வுகளும் பங்குத்தந்தை எப்.சுதாகா் தலைமையிலும், பங்கு ஆலோசகா் எஸ்.ஏ.அருள்ராஜ், பங்கு பேரவை துணைத் தலைவா் சுந்தர்ராஜன், பங்கு பேரவை செயலாளா் லாரன்ஸ், பொருளாளா் பொ்னாட் , பங்கு உறுப்பினா்கள் வின்சென்ட் தே பவுல், சபை உறுப்பினா்கள், மரியின் சேனை அருள் சகோதரிகள் மற்றும் பங்கு மக்களால் இணைந்து நடத்தப்பட்டன.
தொடர்புடையது

ஆலந்தலையில் இயேசுவின் திருவுடல் பவனி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு

புனித வெள்ளி; சிலுவைப் பாதை ஊர்வலம்! ஏராளமானோர் பங்கேற்பு!

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிலுவைப் பாதை ஊா்வலம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


