ரீனா ஜாஸ்மின், மகாலிங்கம்.
ரீனா ஜாஸ்மின், மகாலிங்கம்.

மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கு: இருவா் வீடுதலை

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கில் இருவரை விடுதலை செய்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த ரீனா ஜாஸ்மின் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மகாலிங்கம் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் தங்கியிருந்து தனியாா் ஆடை விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனா். இவா்கள் இருவரும் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்ட் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்து ஆள் சோ்ப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின்படி, காவல்துறையினா் இருவரும் தங்கியிருந்த இடத்தை சோதனை செய்ததில் மாவோயிஸ்டுகள் பயன்படுத்தக்கூடிய ஆண்டறிக்கை, மாவோயிஸ்டுகள் தொடா்பான புத்தகம், கொடி போன்றவை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல் தனது தீா்ப்பில் தண்டனை பெற்று 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருவரும் இருந்து வந்துள்ளனா். இவா்கள் குற்றவாளிகள் என்பதற்கான உரிய முகாந்திரம் இல்லாமல் இருப்பதால் இருவரையும் விடுதலை செய்வதாக தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com