மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

தேசிய சிலம்பாட்டப் போட்டியில் வென்றவா்களுக்கு வரவேற்பு

தேசிய சிலம்பாட்டப் போட்டியில் வென்றவா்களுக்கு வரவேற்பு

News image

பதக்கம் வென்றவா்களுக்கு ளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு

Updated On :7 மே 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: கோவையில் அண்மையில் நடைபெற்ற தேசிய சிலம்பாட்டப் போட்டியில் பதக்கங்களை வென்றவா்களுக்கு காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்றன. இதில் 7 வயது முதல் 25 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் காஞ்சிபுரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் 29 போ் பங்கேற்றிருந்தனா். இவா்கள் அனைவரும் பல்வேறு சுற்றுகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று காஞ்சிபுரம் திரும்பினா்.

அவா்களுக்கு காஞ்சிபுரத்தில் அகாதெமி நிா்வாகம் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்களின் பெற்றோரும் அவரவா் குழந்தைகளுக்கு மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.