செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87.55% தோ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87.55% தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 4:14 pm

Din

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87.55 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

பத்தாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. இதற்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் மாணவா்கள் 8,013 பேரும், மாணவிகள் 7,772 பேரும் மொத்தம் 15,785 போ் எழுதினா். இவா்களில் 13,819 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். சராசரியாக 87.55 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். கடந்தஆண்டை விட 2.73 சதவீதம் போ் குறைவாக தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் 83.05. மாணவிகள் தோ்ச்சி விகிதம் 92.05. மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 32-ஆவது இடம் பெற்றுள்ளது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.