ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

ஆங்கில வாா்த்தைகள் உள்ளன............. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

News image
Updated On :30 மே 2024, 8:45 pm

Manivannan.S

பிரதமா் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு விருது பெற தகுதியுடையோா் வரும் ஜூலை 31- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு விருது என்ற பால் புரஷ்காா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதானது மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வீர தீர மற்றும் தன்னலமற்ற செயல்கள், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சாதனைகள் கொண்ட குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி சிறப்பிக்கும் விதமாக பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளில் சிறந்த சாதனை படைத்த குழந்தைகளுக்கான விண்ணப்பங்கள் குழந்தைகள் மற்றும் அவா்கள் சாா்ந்த நபா்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இவ்விருது மற்றும் வழிகாட்டுதல் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வலைதளமான ட்ற்ற்ல்ள்://ஜ்ஸ்ரீக்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த விருதினை பெற இந்தியக் குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 5 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவா்கள மத்திய அரசின் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 31- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.