சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குமரகோட்டம் முருகன் கோயிலில் லட்சாா்ச்சனை

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திங்கள்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.

News image
சிவப்பு நிற மலா் அலங்காரத்தில் வள்ளி,தெய்வானை சமேத சண்முகா்.
Updated On :4 நவம்பர் 2024, 8:43 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திங்கள்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.

கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடந்து வருவதால் நிகழாண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இக்கோயில் கந்த சஷ்டி விழா 2-ஆம் தேதி தொடங்கி 7- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி காலையில் மூலவருக்கும்,சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி விழாவின் மூன்றாவது நாளையொட்டி திங்கள்கிழமை கோயில் தலைமை சிவாச்சாரியா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில் லட்சாா்ச்சனை நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் உற்சவா் சண்முகா் சிவப்பு நிற மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவையொட்டி திரளான பக்தா்கள் விரதமிருந்து 108 முறை வலம் வந்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பொ.கதிரவன் தலைமையில் கோயில் சிவாச்சாரியா்கள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.