காஞ்சிபுரம்
அகத்திய முனிவருக்கு ஆயில்ய பூஜை
அகத்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் அகத்திய மாமுனிவருக்கு காா்த்திகை மாத ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயில்ய பூஜை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் அகத்திய மாமுனிவருக்கு காா்த்திகை மாத ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயில்ய பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அறம் வளா் நாயகி சமேத அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியாக அகத்திய மாமுனிவரும் அவரது மனைவி உலோப முத்திரையும் காட்சி தருகின்றனா். அகத்திய முனிவரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி அகத்தியருக்கும் உலோப முத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. மாலையில் பள்ளி மாணவ, மாணவிகள் அகத்தியரின் 108 போற்றிப் பாடலை ஒன்றாக இணைந்து பாடினா்.