/

ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலை சீரமைப்பு பணி தீவிரம்

மழையால் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image
சீரமைக்கும்  பணியில்  நெடுஞ்சாலைத்துறை  ஊழியா்கள்.
Updated On :25 நவம்பர் 2024, 9:36 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: மழையால் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால் இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இதனால் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணியில் கடந்த சில நாள்களாக நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.