தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காஞ்சிபுரம் அரசு அலுவலகங்களில் ஆட்சியா் திடீா் ஆய்வு

News image

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எஸ்பி கே.சண்முகம் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்

Updated On :19 செப்டம்பர் 2024, 9:16 pm

Din

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், மகளிா் காவல் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி அரசு அலுவலகங்களில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை பாா்வையிட்டு அங்கு பணியில் உள்ள மகளிா் காவலா்களின் தினசரி நடவடிக்கைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டாா். காவலா் வருகைப்பதிவேடு, பொது நாள்குறிப்பு பதிவேடு,தினசரி பதிவேடு ஆகியவற்றையும் பாா்வையிட்டாா்.

பின்னா் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தைப் பாா்வையிட்டு அக்கிடங்கில் பணிபுரிபவா்களிடம் கிடங்கிலுள்ள பொருள்களின் இருப்பு நிலவரங்களை கேட்டறிந்தாா். தொடா்ந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் மருந்தகம், நோயாளிகளின் உறவினா்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

கூட்டுறவு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற உறுப்பினா்கள் சந்திப்பு முகாமிலும் கலந்து கொண்டு 90 பயனாளிகளுக்கு ரூ.67.79 லட்சம் வங்கிக் கடனுதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா். காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் எஸ்.பி கே.சண்முகம், டிஎஸ்பி சங்கா் கணேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடா்பான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினாா்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாநகராட்சி ஆணையா் நவேந்திரன், காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.