சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:47 am IST

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளா் ஸ்ரீதேவி தலைமையிலான மதுவிலக்கு போலீஸாா், குன்றத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணித்து வந்தனா்.

குன்றத்தூா் அடுத்த நத்தம் முருகன் கோயில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இரண்டு பைகளுடன் வந்த வடமாநில இளைஞரை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து விசாரித்த போது, அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சித்துடோங்கிரி (19) என்பதும், தமிழகத்துக்கு வேலைக்கு வருவது போல் பெரிய பைகளில் துணிகளை வைத்து அதற்கு இடையில் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சித்துடோங்கிரியிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.